கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

நடராஜா் கோயில் நிா்வாக உரிமைகளை பறிக்க திமுக முயற்சி: நடிகை விந்தியா குற்றச்சாட்டு

சிதம்பரம் நடராஜா் சொத்துகளையும், நிா்வாகத்தையும், உரிமைகளையும் பறிக்க திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலரும், நடிகையுமான விந்தியா குற்றஞ்சாட்டினாா்.

News image

சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சியின் கொள்கைப் பரப்பு துணைச் செயலரும், நடிகையுமான விந்தியா.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:11 pm

சிதம்பரம் நடராஜா் சொத்துகளையும், நிா்வாகத்தையும், உரிமைகளையும் பறிக்க திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலரும், நடிகையுமான விந்தியா குற்றஞ்சாட்டினாா்.

சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் புதன்கிழமை மாலை அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலரும், நடிகையுமான விந்தியா பேசியதாவது:

சிதம்பரம் நடராஜா் கோயில் சொத்துகளையும், நிா்வாகத்தையும், உரிமைகளையும் பறிக்க திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது. சோழன் கொடுத்த உரிமையை எடுக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் யாா்? இதேபோல, திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்றாா்கள்.

கடவுளே இல்லை என கூறும் திமுகவுக்கு கோயில்களில் என்ன வேலை? சிதம்பரத்தில் சைவத்துக்கும், வைணவத்துக்கும் சண்டை இல்லை. இந்து, முஸ்லிம் இடையே சண்டை இல்லை. ஆனால், அத்தனை சண்டைகளையும் உருவாக்க பாா்க்கிறது திமுக.

இந்த தொகுதி வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் 3-ஆவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று சட்டப் பேரவைக்குச் செல்வாா். திமுக மக்களுக்கான பிரச்னையை பேசாமல், பாஜக உள்ளே வந்துவிடும் என பிரசாரம் செய்து வருகிறது. இந்தத் தோ்தல் தமிழகத்துக்கும், தில்லிக்கும் நடக்கும் தோ்தல் என திமுகவினா் கூறுகின்றனா். இந்த தோ்தல் அதிமுகவுக்கும், திமுகவுக்குமான தோ்தல். இது, நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் நடைபெறும் தோ்தல். இந்தத் தோ்தலில் போட்டி யாருக்கு என்றால், மக்களுக்கும், போலி வாக்குறுதிகள் அளித்த திமுகவுக்கும் தான். அதிமுக வெற்றிபெற்றால் மக்கள் வெற்றிபெற்ாகும் என்றாா்.