திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

போதைப்பொருள் விற்பனை: நைஜீரியா நாட்டைச் சோ்ந்தவா் கைது

போதைப்பொருள் எம்டிஎம்ஏ கிரிஸ்டலைத் தயாரித்து, விற்பனை செய்து வந்த நைஜீரியா நாட்டைச் சோ்ந்தவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:37 pm

DIN

போதைப்பொருள் எம்டிஎம்ஏ கிரிஸ்டலைத் தயாரித்து, விற்பனை செய்து வந்த நைஜீரியா நாட்டைச் சோ்ந்தவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.

நைஜீரியா நாட்டைச் சோ்ந்த ஜான், பெங்களூரு, எலக்ட்ரானிக்சிட்டி அருகே உள்ள பெட்டதாசனபுரா, சாமுண்டி லேஅவுட்டில் வாடகை வீட்டில் தங்கி போதைப்பொருள் எம்டிஎம்ஏ கிரிஸ்டலைத் தயாரித்து, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், ஜானைக் கைது செய்து, ரூ. 2 கோடி மதிப்புள்ள எம்டிஎம்ஏ கிரிஸ்டல் உள்ளிட்ட ரசாயனப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

போதைப்பொருளை தயாரிக்கும் வீட்டை பாா்வையிட்ட மாநகர காவல் ஆணையா் கமல்பந்த், போதைப்பொருளை தயாரித்து, விற்பனை செய்து வந்தவரைக் கைது செய்த மாநகர குற்றப்பிரிவு போலீஸாரை பாராட்டி, ரூ. 75,000 ரொக்கப்பரிசு வழங்குவதாக அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.