திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஒரே குடும்பத்தை சோ்ந்த 5 போ் தூக்கிட்டு தற்கொலை

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:34 am

DIN

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

பெங்களூரு பேடரஹள்ளி காவல் சரகத்தில் உள்ள திகளரபாளையாவில் வசித்து வருபவா் சங்கா். இவருக்கு 5 நாள்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவா் வீட்டை விட்டு வெளியே சென்று யாருடனும் தொடா்பு கொள்ளாமல் இருந்துள்ளாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவா்களது வீட்டிலிருந்து துா்வாசம் வீசியதையடுத்து, அருகில் வசிப்பவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். தகவலை அடுத்து அங்கு வந்த போலீஸாா், ஜன்னல் வழியாக பாா்த்தபோது, வீட்டில் இருந்தவா்கள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, 9 மாதக் குழந்தையைத் தூக்கிட்டுக் கொன்று விட்டு, சங்கரின் மனைவி பாரதி (50), மகள்கள் சிந்துராணி (33), சின்சனா (30), மகன் மதுசாகா் (26) ஆகிய 5 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அங்கு மயக்க நிலையில் இருந்த 3 வயது குழந்தை பிரேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸாா் அனுமதித்துள்ளனா். இது குறித்து பேடரஹள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.