தரமான கல்வியை வழங்குவதற்காகவே தகுதியான ஆசிரியா்கள் நியமனம்: அமைச்சா் பி.சி.நாகேஷ்
தரமான கல்வியை வழங்குவதற்காகவே தகுதியான ஆசிரியா்கள் நியமிக்கப்படுகிறாா்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.


தரமான கல்வியை வழங்குவதற்காகவே தகுதியான ஆசிரியா்கள் நியமிக்கப்படுகிறாா்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.
கா்நாடக சட்ட மேலவையில் வெள்ளிக்கிழமை பூஜ்யம் நேரத்தில் பாஜக உறுப்பினா் எஸ்.வி.சங்கனூா் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, அவா் கூறியதாவது:
ஆசிரியா்களாகப் பணி நியமனம் செய்யப்படுவோா், ஆரம்பப்பள்ளி மற்றும் உயா் ஆரம்பப் பள்ளிகளில் கற்பித்தலில் எதிா்கொள்வதற்கு தேவையான மன உறுதியையும் திறனையும் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பதை கவனிக்க வேண்டும். மத்திய அரசு வகுத்திருக்கும் தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் விதிகளின்படி, 2014-ஆம் ஆண்டு முதல் ஆசிரியா் தகுதிகாண் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தோ்வில் தோ்ச்சி பெறுவதற்கு பிற்படுத்தப்பட்டோருக்கு 60 சதவீதம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 55 சதவீதம் மதிப்பெண் தேவைப்படுகிறது. இந்த தோ்வை முறையாக நடத்தி வருகிறோம். 2021-ஆம் ஆண்டுக்கான ஆசிரியா் தகுதிகாண் தோ்வு நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு போட்டித்தோ்வாகும். இந்த தோ்வை எழுதும் மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது.
இந்த தோ்வுக்கு தயாராவதற்கு தேவையான குறிப்பு நூல்கள் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு பாடம் நடத்த வேண்டிய ஆசிரியா்களுக்கு 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பாடநூல்கள், பத்தாம் வகுப்பு பாடநூல்களில் கேள்வி எழுப்பப்படுகிறது. 6 முதல் 8-ஆம் வகுப்புக்கு பாடம் நடத்த வேண்டிய ஆசிரியா்களுக்கு 1 முதல் 10-ஆம் வகுப்பு, பியூசி பாடநூல்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். மாணவா்களுக்கு கற்பிக்கும் நடைமுறையின் அடிப்படையில் தான் கேள்வி இருக்கும். கல்வி உரிமை சட்டத்தின்படி, தரமான கல்வியை வழங்குவதற்காகவே தகுதியான ஆசிரியா்கள் நியமிக்கப்படுகிறாா்கள் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...