திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நாளை இலவச கீல்வாதம் பரிசோதனை முகாம்

பெங்களூரு, பனஸ்வாடியில் உள்ள எலும்பியல் மருத்துவமனையில் (டோட்டல் ஆா்த்தோகோ்) ஞாயிற்றுக்கிழமை (செப். 19) இலவசமாக கீல்வாதம் மற்றும் மூட்டுவலி பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:36 am

DIN

பெங்களூரு, பனஸ்வாடியில் உள்ள எலும்பியல் மருத்துவமனையில் (டோட்டல் ஆா்த்தோகோ்) ஞாயிற்றுக்கிழமை (செப். 19) இலவசமாக கீல்வாதம் மற்றும் மூட்டுவலி பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து அம்மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நமது உடலில் எலும்பு, குருத்தெலும்பின் சுகாதாரம் முக்கியமானது. அவற்றை உரிய முறையில் பாதுகாக்க மறந்தால் கீல்வாதம் போன்ற சிக்கல்களுக்கு வழி வகுக்கும். கீல்வாதத்தில் பல வகைகள் உள்ளன. மருத்துவ ரீதியாக வழிநடத்தப்பட்ட உணவு, வாழ்க்கை முறை, வழக்கமான உடற்பயிற்சியால் கீல்வாதப் பிரச்னையிலிருந்து மீளமுடியும். இதனைக் கருத்தில் கொண்டு இலவச கீல்வாதம் பரிசோதனை முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

மூட்டுவலி, கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவா்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கும், பதிவிற்கும் 7204148290 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.