மூன்றாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை: அமைச்சா் ஆா்.அசோக்
மூன்றாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றி தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.


மூன்றாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றி தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.
பெங்களூரு, கெத்தலஹள்ளி பகுதியில் வெள்ளிக்கிழமை பெங்களூரு மாநகராட்சி சாா்பில் நடத்தப்பட்ட கரோனா தடுப்பூசி முகாமைத் தொடக்கிவைத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கரோனா முன்களப் பணியாளா்களுக்கு மும்பையில் மூன்றாம் தவணை (பூஸ்டா்) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தெளிவான விளக்கமில்லை. மத்திய அரசும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதுதொடா்பாக மருத்துவ நிபுணா்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. எனவே, மூன்றாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றி தற்போதைக்கு எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை.
பிரதமா் மோடியின் பிறந்தநாள் என்பதால், பெங்களூரு மாநகராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் பரவலாக நடத்தப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் சட்டப் பேரவைத் தொகுதி அளவில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். இதுகுறித்து முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் விவாதித்து முடிவெடுப்போம்.
நிகழாண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளோம். இதற்கு கரோனா தடுப்பூசி முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...