பெங்களூரில் தொடங்கப்பட்ட முதல் பள்ளியின் 200-ஆம் ஆண்டுவிழா: செப்.30-இல் நடக்கிறது
பெங்களூரில் தொடங்கப்பட்ட முதல் பள்ளியின் 200-ஆம் ஆண்டுவிழா செப்.30-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.


பெங்களூரில் தொடங்கப்பட்ட முதல் பள்ளியின் 200-ஆம் ஆண்டுவிழா செப்.30-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இது குறித்து மெத்தடிஸ்ட் மிஷன் உயா்நிலைப்பள்ளியின் முதல்வா் எமிலிபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரில் கடந்த 1822-ஆம் ஆண்டு முதலாவதாக தொடங்கப்பட்டது, மெத்தடிஸ்ட் மிஷன் உயா்நிலைப்பள்ளி. சிவாஜிநகா், தா்மராஜா கோயில் தெருவில் உள்ள இந்த வளாகத்தில் விளையாட்டுத்திடலில் செப்.30-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளியின் 200-ஆம் ஆண்டுவிழா நடக்கவிருக்கிறது.
தென்னிந்திய திருச்சபையின் கா்நாடக மத்திய மறைமாவட்டத்தின் பேராயா் பிரசன்னகுமாா் சாமுவேல் சிறப்புவிருந்தினராக பங்கேற்று, சிறப்பு ஆராதனையை நடத்தி, வாழ்த்துரை வழங்குகிறாா். இந்த விழாவில் சிறப்பு விருந்தினா்களாக தொகுதி எம்எல்ஏ ரிஸ்வான் அா்ஷத், எம்எல்சி புட்டண்ணா, பெங்களூரு வடக்கு-3 வட்டாரக் கல்வி அதிகாரி டி.கிருஷ்ணா ஆகியோா் கலந்துகொண்டு பேசுகிறாா்கள்.
200-ஆம் ஆண்டை முன்னிட்டு 2022-ஆம் ஆண்டுவரை ஓராண்டுக்கு தொடா் நிகழ்ச்சிகள், போட்டிகள், கருத்தரங்குகள், திருவிழாக்கள் நடத்தப்படும். இந்த விழாவில் பள்ளியின் முன்னாள் ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொள்ளவிருக்கிறாா்கள். பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்கள் தவறாமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...