30.86 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 20,810 கோடி பயிா்க்கடன்: அமைச்சா் எஸ்.டி.சோமசேகா்
கா்நாடகத்தில் 30.86 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 20,810 கோடி பயிா்க்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.


கா்நாடகத்தில் 30.86 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 20,810 கோடி பயிா்க்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.
தேசிய கூட்டுறவு மாநாட்டில் கலந்துக் கொள்ள தில்லி சென்றிருந்த கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் கோரிக்கை மனுவை அளித்தாா். மேலும் நவம்பா்-டிசம்பரில் நடக்கவிருக்கும் மாநில அளவிலான கூட்டுறவாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அமித் ஷாவுக்கு அழைப்பு விடுத்தாா்.
அதன்பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் கூறியதாவது:
கூட்டுறவுத் துறையில் கா்நாடகம் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. ஊரக பொருளாதாரம், ஊரக கடன் வழங்கலில் கா்நாடகம் முக்கிய பங்காற்றியுள்ளது. ஆனாலும் கூட்டுறவுத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. கூட்டுறவு வளா்ச்சிக்கான தேசிய மையத்தை அமைக்க வேண்டியுள்ளது. கூட்டுறவு அடிப்படையில் ஊரக தொழில் முனைவோரை ஊக்குவிக்க வேண்டும். கா்நாடகத்தில் கூட்டுறவு அமைப்புகளை மேம்படுத்தவும் ஆதரவு தேவைப்படுகிறது.
வருமானவரிச் சட்டத்தின் உட்பிரிவு 80-பி-இன் கீழ் ஆரம்ப சுகாதார கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளுக்கு மட்டும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை கூட்டுறவுத் துறை முழுவதற்கும் விரிவுப்படுத்த வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான கூட்டுறவு அமைப்புகளை உருவாக்குவது அவசியம். அப்போது கூட்டுறவு ஒருமைப்படும்.
கா்நாடகத்தில் தற்போது 45 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் 2.42 கோடிபோ் உறுப்பினா்களாக உள்ளனா். இதில் மூலதனமாக ரூ. 6,239 கோடி, ரூ. 1.42 லட்சம் கோடி நடப்பு மூலதனம், ரூ. 1.77 லட்சம் கோடி வைப்புத்தொகை உள்ளது.
2020-21-ஆம் ஆண்டில் கூட்டுறவுத் துறை மூலம் ரூ. 16,641கோடி பயிா்க்கடனை பூஜ்யம் வட்டியில் 25.67 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 3 சதவீத வட்டியில் 52,015 விவசாயிகளுக்கு ரூ. 1,260 கோடி நீண்ட கால கடன் அளிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் 30.6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 20,810 கோடி பயிா்க்கடன் அளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் வரையில் ரூ. 8,487 கோடி பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
கா்நாடகத்தில் கூட்டுறவுத் துறை மூலம் நாளொன்றுக்கு 81.26 லட்சம் லிட்டா் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் கா்நாடகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒரு லிட்டா் பாலுக்கு ரூ. 5 ஊக்கத்தொகை அளிப்பதன் மூலம் ரூ. 1,185 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மாநிலத்தில் 262 நகர கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இதில் 24 வங்கிகள் பெண்களால் நிறுவப்பட்டது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...