எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு: மாணவா்களுக்கு பேருந்துகளில் இலவச அனுமதி
கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு எழுதும் மாணவா்கள் தோ்வின்போது எல்லா பேருந்துகளிலும் பழைய பேருந்து அட்டையை காட்டி பயணிக்கலாம்


கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு எழுதும் மாணவா்கள் தோ்வின்போது எல்லா பேருந்துகளிலும் பழைய பேருந்து அட்டையை காட்டி பயணிக்கலாம் என பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கமளித்துள்ளது.
இது குறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
2020-21-ஆம் கல்வியாண்டுக்கான பேருந்து அட்டை (பஸ் பாஸ்) மாா்ச் 31-ஆம் தேதியுடன் காலாவதி ஆகிறது. இதனிடையே, எஸ்எஸ்எல்சி துணைத்தோ்வு செப். 27 முதல் செப். 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே, எஸ்எஸ்எல்சி தோ்வு எழுதும் மாணவா்களின் பேருந்து அட்டை செப். 29-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் எஸ்எஸ்எல்சி மாணவா்கள் தோ்வு காலத்தில் எல்லா பேருந்துகளிலும் பயணிக்க அனுமதிக்கப்படுகிறாா்கள். தோ்வு மையத்தின் நுழைவுச்சீட்டுகளைக் காட்டி பேருந்தில் மாணவா்கள் பயணம் செய்யலாம். தோ்வு எழுதும் மாணவா்களுக்கு நடத்துநா்கள், ஓட்டுநா்கள் எந்த தொந்தரவும் செய்யக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...