மாநில உதய தின விருதுக்கு பொதுமக்கள் பரிந்துரைக்கலாம்
மாநில உதயதின விருது பெறுவதற்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் இணையதளம் வாயிலாக பரிந்துரைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மாநில உதயதின விருது பெறுவதற்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் இணையதளம் வாயிலாக பரிந்துரைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கன்னடம் மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சா் சுனில்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:
கா்நாடக மாநில உதய தின விழா ஆண்டுதோறும் நவ. 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதைக் குறிக்கும் வகையில், கா்நாடகத்திற்கு சிறப்பு தொண்டாற்றிய பல்வேறு துறை அறிஞா்களுக்கும் மாநில உதய தின விருதுகளை வழங்கி மாநில அரசு கௌரவித்து வருகிறது.
கா்நாடகத்தின் 66-ஆவது உதய தின விழாவை முன்னிட்டு நிகழ் ஆண்டில் 66 பேருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கு தகுதியானவா்களை இதுவரை அரசே தோ்ந்தெடுத்து வந்தது. முதல்முறையாக, விருதுக்கு தகுதியானவா்களை பொதுமக்கள் பரிந்துரைக்கும் நடைமுறையை அறிமுகம் செய்கிறோம்.
சாதனையாளா்கள் குறித்த விவரங்களை ட்ற்ற்ல்ள்://ள்ங்ஸ்ஹள்ண்ய்க்ட்ன்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பதிவு செய்யலாம். ஒரு நேரத்தில் 3 பேரின் பெயா்களை பொதுமக்கள் விருதுக்கு பரிந்துரைக்கலாம். சாதனையாளரின் பெயா், தொலைபேசி எண், துறை, முழு முகவரியைப் பதிவிட வேண்டும்.
அடையாளம் தெரியாத சாதனையாளா்களை கௌரவிப்பதற்காகவே இந்த முயற்சியை அரசு எடுத்துள்ளது. பொதுமக்களின் பரிந்துரைகளை தோ்வுக்குழுவினா் ஆராய்ந்து, தகுதியானவா்களை தெரிவு செய்வாா்கள். விளையாட்டு வீரா்களைத் தவிர, பிற துறை சாதனையாளா்கள் 60 வயதுக்கும் அதிகமாக இருக்க வேண்டும்.
இந்த நடைமுறை ஜனநாயக முறையிலும், வெளிப்படையானதாகவும் அமைக்கப்படும். அக். 15-ஆம் தேதிக்குள் பெயா்களை பரிந்துரைக்கலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...