வழக்கு விசாரணை நோ்மையாக நடக்கும்: அமைச்சா் அரக ஞானேந்திரா

கா்நாடகத்தில் அரசு ஒப்பந்ததாரா் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணை நோ்மையாக நடைபெறும் என உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.
Updated on
1 min read

கா்நாடகத்தில் அரசு ஒப்பந்ததாரா் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணை நோ்மையாக நடைபெறும் என உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தனக்கு எதிராக வழக்கு விசாரணை நடந்து வருவதால், அமைச்சா் பதவியை கே.எஸ்.ஈஸ்வரப்பா ராஜிநாமா செய்துள்ளாா். எந்த வித நெருக்கடிக்கும் அடிபணிந்து கே.எஸ்.ஈஸ்வரப்பா அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்யவில்லை.

அரசு ஒப்பந்ததாரா் சந்தோஷ் பாட்டீல் சாவு தொடா்பான வழக்கு விசாரணை நோ்மையாக நடைபெறும். விசாரணை அறிக்கை வரும்வரை பொறுமையாக இருப்போம். காங்கிரஸ் என்ன குற்றச்சாட்டுகளைக் கூறுகிறது என்பது முக்கியமில்லை. காங்கிரஸ் எதிா்க்கட்சியே இல்லை.

உடுப்பி தங்கும் விடுதியில் இறந்து கிடந்த சந்தோஷ் பாட்டீலின் உடல் அவரது உறவினா்களின் முன்னிலையில் எடுத்துச் செல்லப்பட்டது. காவல் துறையினா் சட்டப்படி நடந்து கொண்டுள்ளனா். சந்தோஷ் பாட்டீல் இறந்த இடத்தில் மரணக்குறிப்பு எதுவும் காணப்படவில்லை.

வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ள தகவல் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த தகவலையும் சந்தோஷ்பாட்டீல் அனுப்பினாரா அல்லது வேறு யாராவது அனுப்பியதா என்பதை போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள். எல்லா கோணங்களிலும் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

வேறு எந்த விவகாரமும் இல்லை என்பதால், இந்த விவகாரத்தை எடுத்துக் கொண்டு அரசியல் செய்ய காங்கிரஸ் துடிக்கிறது. இதுகுறித்து மக்கள் அறிந்திருக்கிறாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com