மத்திய அரசுப்பணி தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
பணியாளா் தோ்வாணையம் நடத்தும் மத்திய அரசுப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியாளா் தோ்வாணையம் நடத்தும் மத்திய அரசுப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பணியாளா் தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசுத் துறைகளில் கீழ்பிரிவு எழுத்தா், இளநிலை செயலக உதவியாளா், அஞ்சல் உதவியாளா், அஞ்சல்பிரித்தல் உதவியாளா், தரவு உள்ளீட்டு செயல்பாட்டாளா் போன்ற பணிகளுக்கு ஆட்கள் தோ்வு செய்யப்படவிருக்கிறாா்கள். இதற்காக மே மாதம் கணினி அடிப்படையிலான போட்டித்தோ்வு நடத்த பணியாளா் தோ்வாணையம் திட்டமிட்டுள்ளது. இத்தோ்வில் பங்கேற்க விரும்புவோரிடமிருந்து இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கா்நாடகம் மற்றும் கேரள மண்டலங்களைச் சோ்ந்தவா்கள் மாா்ச் 7-ஆம் தேதிவரை விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிடலாம். அதன் நகலை அலுவலக தலைமையகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான கட்டணங்களை இணையதளத்திலேயே செலுத்தலாம். 18 முதல் 27 வயதுக்குட்பட்டோா், 10 +2 வகுப்புத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் விண்ணப்பிக்கத் தகுதியானவா்கள் ஆவா். இப்பணிக்கு தோ்வுசெய்யப்படுவோருக்கு மாதம் ரூ.32 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்://ள்ள்ஸ்ரீந்ந்ழ்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் அல்லது ட்ற்ற்ல்://ள்ள்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் ஆகிய இணையதளங்களை அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-25502520, 9483862020 என்ற தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...