
ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீது தாக்குதல்: பேரழிவு உறுதி - ரஷியா கண்டனம்!
பொறுப்பற்ற செயல்கள் மத்திய கிழக்கெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு ரஷியா கடும் கண்டனம்!
ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - AP Photo
ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்தது.
தலைநகர் தெஹ்ரானிலிருந்து தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நடான்ஸ் அணுசக்தி மையம், சனிக்கிழமை(மார்ச் 21) வான் வழி தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாக ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்தத் தாக்குதலால் கதிவீச்சு அபாயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடான்ஸ் அணுசக்தி மையம் மீதான தாக்குதல்களைச் ‘சர்வதேச சட்ட மீறல்’ என்று குறிப்பிட்டு ரஷிய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் மரியா ஸகாரோவா கண்டனத்தைப் பதிவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக, ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் மத்திய கிழக்கெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் மேலும், அவை இப்பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிட்டது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Russia condemns attacks on Iran's nuclear facility
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






