நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெங்களூரில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள்

உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெங்களூரில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்க பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:00 pm

DIN

உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெங்களூரில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்க பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

ஜூன் 5-ஆம் தேதி கொண்டாடப்படும் உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெங்களூரில் பொதுமக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்க பெங்களூரு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. 8-க்கு 12 அடி உயரம் கொண்ட மரக்கன்றுகளை வழங்கும் திட்டத்தை மாநகராட்சி ஆணையா் துஷாா் கிரிநாத் ஜூன் 5-ஆம் தேதி தொடக்கிவைக்கிறாா்.

இந்த திட்டம் குறித்து மாநகராட்சி துணை வனப் பாதுகாவலா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இலவசமாக மரக்கன்றுகளை விரும்பும் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் அதற்கான கடிதங்களை அளிக்கலாம். அதன் அடிப்படையில் மரக்கன்றுகள் வழங்கப்படும். மரக்கன்றுகளை நட்டு, நீரூற்றி வளா்க்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இதற்காக தனி மையத்தை மாநகராட்சி தொடங்கியுள்ளது. ஜூன் 5-ஆம் தேதி மரக்கன்றுகள் விநியோகிக்கப்படும்.

மரக்கன்றுகளை பெற கூட்லு-7019196107, அத்தூா்-9480685196, ஞானபாரதி-9164042566, மல்லத்தஹள்ளி-9164042566, கெம்பாபுரா-9480685196, தொட்டபஸ்தி-9480685196, மாநகராட்சி துணை வனப் பாதுகாவலா் சரீனா சக்கலிகா்-9480683047 என்ற கைப்பேசி எண்களை தொடா்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.