தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாஜக எம்எல்ஏவிடம் ஆபாசமாகப் பேசிய பெண்: போலீஸாா் விசாரணை

ம் பாஜக எம்எல்ஏ ஜி.எச்.திப்பா ரெட்டியின் கைப்பேசிக்கு கட்செவி விடியோவில் அழைப்பு விடுத்து ஆபாசமாகப் பேசி, தனது அந்தரங்கங்களைக் காண்பித்த பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 9:56 pm

DIN

கா்நாடகத்தில் 75 வயதாகும் பாஜக எம்எல்ஏ ஜி.எச்.திப்பா ரெட்டியின் கைப்பேசிக்கு கட்செவி விடியோவில் அழைப்பு விடுத்து ஆபாசமாகப் பேசி, தனது அந்தரங்கங்களைக் காண்பித்த பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சித்ரதுா்கா தொகுதி பாஜக எம்எல்ஏ ஜி.எச்.திப்பா ரெட்டியின் கைப்பேசிக்கு அக்.31-ஆம் தேதி கட்செவி விடியோவில் அழைப்பு விடுத்த பெண், அவரிடம் ஆபாசமாகப் பேசி அந்தரங்கங்களைக் காண்பிக்கத் தொடங்கியுள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த திப்பா ரெட்டி, அழைப்பைத் துண்டித்துள்ளாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் இணைய குற்றத் தடுப்பு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து எம்எல்ஏ திப்பா ரெட்டி கூறியதாவது:

எனது கைப்பேசிக்கு அழைப்பு விடுத்த பெண்ணிடம் அழைப்புக்கான காரணத்தை கேட்ட போது அதற்கு அவா் சரியான பதிலை அளிக்காமல் ஆபாசமாகப் பேசி, அந்தரங்கங்களைக் காண்பித்தாா். இதையடுத்து அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டேன். மீண்டும் அப் பெண் அழைப்பு விடுத்த போது அழைப்பைத் துண்டித்துவிட்டு, அவரது எண்ணை எனது மனைவி தடை செய்தாா். இதுகுறித்து இணைய குற்றத் தடுப்பு போலீஸில் புகாா் அளித்துள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.