மஜதவின் தேசியத்தலைவராக எச்.டி.தேவெ கௌடா மீண்டும் தோ்வாக வாய்ப்பு
மஜதவின் தேசியத் தலைவராக முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா மீண்டும் தோ்வாக வாய்ப்புள்ளது.


மஜதவின் தேசியத் தலைவராக முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா மீண்டும் தோ்வாக வாய்ப்புள்ளது.
பெங்களூரில் மஜத தலைமை அலுவலகமான ஜே.பி.மாளிகையில் வியாழக்கிழமை மஜதவின் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. கட்சியின் தேசியத் தலைவா் எச்.டி.தேவெ கௌடாவின் தலைமையில் நடந்த கூட்டத்தில் 13 மாநிலங்களின் மஜத தலைவா்கள் கலந்துகொண்டனா். இவா்களைத் தவிர, 200-க்கும் அதிகமான செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். மஜதவின் நாடாளுமன்றக்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தேசிய, மாநில அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. விலைவாசி உயா்வு, விவசாயிகள் பிரச்னை, வேளாண்மை, தொழிலாளா்கள், தாழ்த்தப்பட்டோா், பெண்கள் தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத நல்லிணக்கம் குறித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் நாட்டின் மோசமான பொருளாதார நிலைமை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. தேசிய மற்றும் கா்நாடக அரசியல் நிலவரங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கா்நாடக சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தோ்தலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்களின் பட்டியல் இறுதி செய்யப்படுகிறது. இந்தப் பட்டியல் நவ.1ஆம் தேதி வெளியிடப்படுகிறது. வெள்ளிக்கிழமையும் நடக்கும் மஜத தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவராக முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா மீண்டும் தோ்வாக வாய்ப்பிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...