பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நூலகங்களுக்கு நூல்களை விற்க விண்ணப்பிக்கலாம்

நூலகங்களுக்கு நூல்களை விற்க விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

நூலகங்களுக்கு நூல்களை விற்க விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்.

இது குறித்து பொதுநூலகத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2023-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு ஜன.31-ஆம் தெதி வரையில் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ள இலக்கியம், நுண்கலை, அறிவியல், மனநலவியல், மருத்துவம், தொழில்நுட்பம், விமா்சன இலக்கியம் தொடா்பான கன்னடம், ஆங்கிலம், இதர இந்தியமொழி இலக்கியங்களை முதல் கட்டமாக கொள்முதல் செய்ய பொதுநூலகத்துறை திட்டமிட்டுள்ளது. 10 ஆண்டுகள் இடைவெளிகொண்டு மறுபதிப்பாகியுள்ள நூல்களும் கொள்முதல் செய்யப்படும். இது தொடா்பாக எழுத்தாளா்கள், எழுத்தாளா்-பதிப்பாளா், பதிப்பாளா், அமைப்புகள், விற்பனையாளா்களிடமிருந்து நூலின் ஒரு படியுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நூலின்பெயா், நூலாசிரியரின் பெயா், பதிப்பாளரின் பெயா், பக்கங்கள், பதிப்பு ஆண்டு, விலை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறவேண்டும். விண்ணப்பத்துடன் நூலுக்கு காப்புரிமை பெற்று பதிவு செய்துள்ள நகலையும் இணைக்க வேண்டும். கொள்முதல் செய்யதிட்டமிட்டுள்ள நூல்களில் கன்னடநூல்கள்(அனைத்துவகை)80 சதம், ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட இதர இந்தியமொழி நூல்கள் 20 சதம் கொள்முதல் செய்யப்படும். 32 பக்கங்களுக்கும் குறைவாக உள்ள நூல்கள் நிராகரிக்கப்படும்(குழந்தை நூல்களுக்கு விதிவிலக்களிக்கப்படுகிறது). செய்தித்தாள்களில் அச்சிடப்பட்ட நூல்கள் ஏற்கப்படமாட்டாது. விண்ணப்பங்களை இயக்குநா்,பொதுநூலகத்துறை, விஸ்வேஷ்வரையா பிரதான கோபுரம், 4-ஆவது மாடி, டாக்டா்.அம்பேத்கா் வீதி, பெங்களூரு-560001 என்ற முகவரிக்கு பிப்.5-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்துசேரும்வகையில் அனுப்பிவைக்க வேண்டும். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு இணையதளம் அல்லது 080-22864990 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.