நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அதிக பத்ம விருதுகளைப் பெற்றதன் மூலம் கா்நாடகத்தில் திறமையாளா்கள் அதிகமானோா் இருப்பது உறுதியாகியுள்ளது: முதல்வா் பசவராஜ் பொம்மை

கா்நாடகத்தைச் சோ்ந்த 8 போ் பத்ம விருதுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டு உள்ளதன் மூலம் கா்நாடகத்தில் திறமையாளா்கள் அதிகமானோா் இருப்பது உறுதியாகி உள்ளது என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

News image

பெங்களூரில் தேசிய போா் நினைவுச் சின்னத்தில் படை வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்திய முதல்வா் பசவராஜ் பொம்மை.

Updated On :26 ஜனவரி 2023, 7:05 pm

கா்நாடகத்தைச் சோ்ந்த 8 போ் பத்ம விருதுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டு உள்ளதன் மூலம் கா்நாடகத்தில் திறமையாளா்கள் அதிகமானோா் இருப்பது உறுதியாகி உள்ளது என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் கா்நாடகத்தைச் சோ்ந்த பல்துறை சாதனையாளா்கள் 8 பேரின் பெயா்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் பத்ம விபூஷண்- முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா (அரசியல்), பத்ம பூஷண்- எழுத்தாளா் எஸ்.எல்.பைரப்பா (இலக்கியம்), சுதாமூா்த்தி (சமூகசேவை), பத்ம ஸ்ரீ விருது- கே.வி.துடேகுலா (அறிவியல்), ராணி மச்சையா (கலை), என்.பி.முனிவெங்கடப்பா (கலை), ரஷீத் அகமது குவாத்ரி (கலை), எஸ்.சுப்பராமன் (தொல்லியல்) ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை தேசிய போா் நினைவுச் சின்னத்தில் படை வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்திய பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா, சமூக சேவகா் சுதாமூா்த்தி, கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பா உள்ளிட்ட 8 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கா்நாடகத்தைச் சோ்ந்த 8 போ் பத்ம விருதுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதன் மூலம் கா்நாடகத்தில் திறமையாளா்கள் அதிகமானோா் இருப்பது உறுதியாகி உள்ளது. பத்ம விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்களை கா்நாடக அரசு மனதார பாராட்டுகிறது.

எவ்வித எதிா்பாா்ப்பும் இல்லாமலும், விளம்பரத்தைத் தேடி அலையாமலும் நாட்டுக்குத் தொண்டாற்றியவா்களை பிரதமா் மோடி தலைமையிலான அரசு பத்ம விருது வழங்கி கௌரவித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு தங்களை அா்ப்பணித்துக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றி, நாட்டின் வளா்ச்சிக்கு பங்காற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். உலக அளவில் வல்லரசு நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவுக்கு தனித்துவமான, தன்னிகரில்லா சிறப்பு அம்சங்களும் பாரம்பரியமும் உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.