மங்களூரு விமான நிலையத்தில் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
மங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள தங்கம் பிப்ரவரி மாதத்தில் பறிமுதல் செய்துள்ளது.


மங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1.08 கோடி மதிப்புள்ள தங்கம் பிப்ரவரி மாதத்தில் பறிமுதல் செய்துள்ளது.
இதுகுறித்து மங்களூரு பன்னாட்டு விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிப்ரவரி மாதம் 16 முதல் 28-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ரூ. 1.08 கோடி மதிப்பிலான 1,913 கிராம் தங்கம் மங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கவரித் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா். இந்த தங்கம், ஒரு பெண் பயணி மற்றும் 6 ஆண் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்ட தங்கம், ஆடை, மலக்குடல், வாயில் மறைத்து எடுத்து வந்த பயணிகளிடம் இருந்து எடுக்கப்பட்டது. ஒரு பெண்மணி, தனது உள்ளாடையின் பட்டையில் பசை வடிவில் ஒட்டி மறைத்து தங்கத்தை கடத்தினாா். ஒரு ஆண், வாயில் பசை வடிவில் தங்கம் ஒட்டப்பட்டிருந்தது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...