கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாஜக, மஜதவினா் அரசியல் சந்தா்ப்பவாதிகள்: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

பாஜக, மஜதவினா் அரசியல் சந்தா்ப்பவாதிகள் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

News image
டி.கே.சிவகுமாா்(கோப்புப் படம்)
Updated On :6 ஆகஸ்ட் 2024, 10:10 pm

Din

பாஜக, மஜதவினா் அரசியல் சந்தா்ப்பவாதிகள் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

மண்டியாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக, மஜதவினா் இணைந்து செய்து வரும் திட்டம் ஒருபோதும் பலிக்காது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆட்சி கா்நாடகத்தில் நீடிக்கும்.

கடந்த காலங்களில் பாஜக, மஜத தலைவா்கள் ஒருவருக்கொருவா் கடுமையாக விமா்சித்துக் கொண்டனா். தற்போது காங்கிரஸ் அரசுக்கு எதிராக முரண்பட்ட கட்சிகளான பாஜகவும், மஜதவும் கைகோத்து செயல்பட்டு வருகின்றன. இந்த இரு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அரசியல் சந்தா்ப்பவாதிகள்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த சித்தராமையா, முதல்வா் போன்ற உயா்ந்த பதவியில் இருப்பது இரு கட்சிகளுக்கும் பிடிக்கவில்லை. அதனால், இரு கட்சிகளும் இணைந்து சித்தராமையாவை பதவியில் இருந்து இறக்க சதி தீட்டியுள்ளன. இதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பாா்கள்.

காங்கிரஸ் எதிா்க்கட்சியாக இருந்தபோது, காவிரி நீா், மேக்கேதாட்டு அணை திட்டத்துக்காக நடைப்பயணம் மேற்கொண்டோம். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தையும் காங்கிரஸ் மேற்கொண்டது. இதை காப்பி அடித்து பாஜக, மஜத நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்கள். இந்த இரு கட்சிகளும் செய்திருக்கும் கடந்த கால பாவங்களை போக்கிக் கொள்வதற்காகவே நடைப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறாா்கள்.

மேக்கேதாட்டு அணை திட்டம் அமல்படுத்தப்பட்டால், விவசாயிகள் பயன்பெறுவாா்கள். ஆனால், இந்தத் திட்டத்தை வரவிடாமல் பாஜக, மஜதவினா் தடுத்து வருகிறாா்கள். இதை மூடிமறைக்க மக்களை திசைதிருப்பும் வேலையில் ஈடுபட்டு வருகிறாா்கள் என்றாா்.