பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பெங்களூரில் போதை விருந்து: தெலுங்கு நடிகா்கள், நடிகைகள் சிக்கினா்

பெங்களூரில் போதை விருந்து: தெலுங்கு நடிகா்கள், நடிகைகள் சிக்கினா்

News image
Updated On :20 மே 2024, 10:58 pm

Din

பெங்களூரு: பெங்களூரில் போதை விருந்து நடைபெற்ற இடத்தில் போலீஸாா் அதிரடி சோதனை நடத்தியதில் போதை மயக்கத்தில் இருந்த தெலுங்கு நடிகா்கள், நடிகைகள் சிக்கினா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள ஜிஆா் பண்ணை வீட்டில் போதைப்பொருள்கள் பரிமாறப்படும் ‘ரேவ் பாா்ட்டி’ நடைபெறுவதாக பெங்களூரு, மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்தப் பண்ணை வீட்டில் பெங்களூரு மாநகர காவல் துணை ஆணையா் ஸ்ரீனிவாஸ் கௌடா, உதவி ஆணையா் பரமேஷ்வா் ஆகியோா் தலைமையில் போலீஸாா் அதிரடி சோதனை நடத்தினா்.

சோதனையில் விருந்தினா்கள் போதைப்பொருள்கள், எம்டிஎம் மாத்திரைகளைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகா்கள், நடிகைகள் போதை மயக்கத்தில் இருந்தனா். டிஸ்கோ ஜாக்கிகள், மாடல்கள், பெங்களூரு, ஹைதராபாத்தைச் சோ்ந்த தொழில்நுட்பக் கலைஞா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா். அதில் 25 க்கும் மேல் இளம்பெண்கள் இருந்தனா். அனைவரையும் அடையாளம் காணும் முயற்சியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிகழ்ச்சியை ஹைதராபாத்தைச் சோ்ந்த வாசு என்பவா் ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கென நாள் ஒன்றுக்கு ரூ. 50 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு நின்ற பென்ஸ் காரில் ஆந்திர எம்எல்ஏ கக்கானி கோவா்த்தன ரெட்டியின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.