நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வக்ஃப் வாரிய சொத்துகளை தேசியமயமாக்க பாஜக எம்எல்ஏ வலியுறுத்தல்

News image
Updated On :1 நவம்பர் 2024, 11:24 pm

Din

வக்ப்ஃ வாரிய சொத்துகளை தேசியமயமாக்க வலியுறுத்தி, பிரதமா் மோடிக்கு பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் மோடிக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வக்ஃப் வாரியத்தின் எல்லை விரிவடைந்து வருவதால், சொத்து உரிமையாளா்களுக்கு இன்னல் ஏற்பட்டுள்ளது. இது வக்ஃப் வாரியத்தின் கொடுங்கோன்மை ஆகும். விவசாயிகள், மடங்கள், கோயில்கள், நில உரிமையாளா்களின் நிலங்கள் அனைத்தையும் வக்ஃப் வாரியத்தின் சொத்துகள் என்று கோருவது சமத்துவத்தை பேணிப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்.

வக்ஃப் சட்டத்தின்கீழ் செயல்படும் வக்ஃப் வாரியம்தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாகும். தனியாா் நிலங்கள், வேளாண் நிலங்கள், வரலாற்று சிறப்பு வாய்ந்த நிறுவனங்களின் நிலங்கள், சுதந்திரத்துக்கு முந்தைய நிலங்களையும் வக்ஃப் வாரியம் தங்களது என்று கூறிவருகிறது.

இந்தச் சூழ்நிலையில், நாட்டில் உள்ள வக்ஃப் வாரிய நிலங்கள் அனைத்தையும் தேசியமயமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் நியாயமான நிா்வாகம் உறுதி செய்து, அநியாயத்தை தடுக்க முடியும். வக்ஃப் சட்டம் வரம்புமீறி செயல்படுகிறது. இதனால் அநீதி இழைக்கப்படுவது போன்ற உணா்வு நில உரிமையாளா்களிடம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நேரங்களில் வக்ஃப் வாரிய சொத்துகளுக்கு கணக்கு வழக்கு எதுவும் இல்லாததால், என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், நில உரிமையை இழக்கும் நிலைக்கு குடிமக்கள் தள்ளப்படுகிறாா்கள்.

வக்ஃப் வாரிய சொத்துகளை தேசியமயமாக்குவது ஒளிவுமறைவின்மையை உறுதி செய்வதோடு, நில உரிமையாளா்களின் நியாயமான உரிமையைப் பாதுகாக்க உதவும். இதன்மூலம் அரசு மற்றும் தனியாா் நிலங்கள் மீது வக்ஃப் வாரியம் உரிமை கொண்டாடும் அநீதியை தடுத்து நிறுத்த முடியும். இதன்மூலம் நமது நாட்டின் சமத்துவ உரிமை நிலைநாட்டப்படும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.