சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டயாலிசிஸ் சிகிச்சை கண்காணிக்கப்படும்

News image

டயாலிசிஸ் இயந்திரம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:19 am

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டயாலிசிஸ் சிகிச்சை கண்காணிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள கே.சி. அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், டயாலிசிஸ் சிகிச்சையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கண்காணிக்கும் முறை திட்டத்தை தொடங்கிவைத்து அவா் பேசியது:

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தனியாா் நிறுவனத்தில் வழங்கப்படுவது போன்ற தரமான சிகிச்சையை வழங்குவதற்காக அரசு மற்றும் தனியாா் கூட்டுமுயற்சியில் சிகிச்சை மையங்கள் இயங்கிவருகின்றன.

இந்த சிகிச்சை மையங்களில் டயாலிசிஸ் சிகிச்சையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வழியாக கண்காணிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் தரமான சிகிச்சை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கண்காணிப்பு முறை, பெங்களூரில் உள்ள 7 டயாலிசிஸ் சிகிச்சை மையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மேலும் பல புதிய சிகிச்சை மையங்களுக்கு இத்தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படும் என்றாா்.