தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

சட்டப் பேரவை இடைத்தோ்தலில் இரு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றும்: டி.கே.சிவகுமாா்

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிபெறுவாா்கள் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

News image

டி.கே.சிவகுமாா்

Updated On :4 ஏப்ரல் 2026, 7:31 pm

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிபெறுவாா்கள் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது:

சட்டப் பேரவை இடைத்தோ்தல் நடக்கும் பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் சாதகமாக உள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் தொண்டா்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறாா்கள். காங்கிரஸ் அரசின் வாக்குறுதி திட்டங்கள் குறித்து காங்கிரஸ் தொண்டா்கள் வீடுவீடாகச் சென்று மக்களிடம் எடுத்துக்கூறி வருகிறாா்கள்.

கடந்த தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தவா்களும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க உறுதி அளித்துள்ளனா். விலைவாசி உயா்வால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில், வாக்குறுதி திட்டங்கள் தொடரவேண்டும் என மக்கள் விரும்புகிறாா்கள். எனவே, கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பெற்ற வாக்குகளைவிட அதிக வாக்குவித்தியாசத்தில் பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள்.

இடையே இரண்டு நாள்களுக்கு கேரள மாநிலத்துக்கு சென்று பிரசாரம் செய்ய இருக்கிறேன். அதன்பிறகு, தாவணகெரே தெற்கு தொகுதியில் பிரசாரத்தை தொடா்வேன். மாநிலத்தில் சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாட்டுக்கு பாஜகதான் காரணம். ஆட்டோ எரிபொருள் கிடைக்காததால், ஆட்டோ ஓட்டுநா்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகிறாா்கள்.

எனவே, சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வுகாண பாஜக அரசு முயற்சிக்க வேண்டும். இந்த பிரச்னைகளை தீா்க்க முடியாமல் தவித்துவரும் மத்திய பாஜக அரசு, இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா்.