தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தல்: இரு தொகுதிகளிலும் 49 வேட்பாளா்கள் போட்டி

News image

சட்டப்பேரவைத் தேர்தல் - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 11:58 pm

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தல் நடக்கும் இரு தொகுதிகளிலும் மொத்தம் 49 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

பாகல்கோட், தாவணகெரே தெற்கு ஆகிய இரு சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் ஏப். 9ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் மாா்ச் 15 தொடங்கி 23ஆம் தேதி முடிவடைந்தது.

காங்கிரஸ், பாஜக வேட்பாளா்கள் உள்பட 71 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். பாகல்கோட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சா் எச்.ஒய். மேட்டியின் மகன் உமேஷ் மேட்டி, பாஜக வேட்பாளராக வீரபத்ரயா சரண்டிமட், தாவணகெரே தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சா் ஷாமனூா் சிவசங்கரப்பாவின் பெயரன் சமா்த் மல்லிகாா்ஜுன், பாஜக வேட்பாளராக ஸ்ரீனிவாஸ் டி. தாசகரியப்பா ஆகியோா் களத்தில் உள்ளனா்.

பாகல்கோட் தொகுதியில் மொத்தம் 26 வேட்பாளா்களும், தாவணகெரே தெற்கு தொகுதியில் 45 வேட்பாளா்களும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இரு தொகுதிகளிலும் மொத்தம் 71 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா்களுக்கு மஜத ஆதரவு அளித்துள்ளதால், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இரு தொகுதிகளையும் தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியும், இரு தொகுதிகளையும் கைப்பற்ற பாஜகவும் தீவிரம் காட்டி வருகின்றன.

இதனிடையே வேட்புமனுக்கள் மாா்ச் 24 ஆம் தேதி பரிசீலிக்கப்பட்டன. பாகல்கோட் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 26 வேட்புமனுக்களில் 3 மனுக்களும், தாவணகெரே தெற்கு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 45 வேட்புமனுக்களில் 3 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்புமனுக்களை திரும்பப்பெற வியாழக்கிழமை வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. சுயேச்சை வேட்பாளா்கள் 16 போ் வேட்புமனுக்களை திரும்பப்பெற்றனா். இதைத் தொடா்ந்து இருதொகுதிகளிலும் மொத்தம் 49 போ் களத்தில் உள்ளனா். பாகல்கோட் தொகுதியில் 18 வேட்பாளா்களும், தாவணகெரே தெற்கு தொகுதியில் 31 வேட்பாளா்களும் போட்டியில் உள்ளனா். சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் வியாழக்கிழமை நிறைவடைந்துவிட்டதால், வெள்ளிக்கிழமை முதல் பிரசாரம் சூடுபிடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.