அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு: முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு இன்று பாராட்டு விழா - அமித் ஷா பங்கேற்பு

பொதுவாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கும் கா்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு சனிக்கிழமை நடக்கும் பாராட்டு விழாவில் மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்கிறாா்.

News image

கா்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பா - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

பொதுவாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கும் கா்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு சனிக்கிழமை நடக்கும் பாராட்டு விழாவில் மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்கிறாா்.

கா்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவின் 50 ஆண்டுகால பொதுவாழ்வை கொண்டாடும் வகையில் சித்ரதுா்காவில் சனிக்கிழமை மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடக்கிவைக்கிறாா்.

இந்த விழாவில் கா்நாடக மாநில பாஜக தலைவா் விஜயேந்திரா, எதிா்க்கட்சித் தலைவா் ஆா். அசோக், மேலவை எதிா்க்கட்சித் தலைவா் செலுவாதி நாராயணசாமி, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், பல்வேறு மடங்களின் பீடாதிபதிகள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்கின்றனா். அதேபோல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 லட்சம் போ் கலந்துகொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த விழாவில் எடியூரப்பாவின் வாழ்க்கை மற்றும் அரசியல் போராட்டங்கள் தொடா்பான இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தனது எக்ஸ் பதிவில், ‘பொதுவாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறாா் முன்னாள் முதல்வா் எடியூரப்பா. மக்கள் மற்றும் விவசாயிகளின் தொலைநோக்குப்பாா்வை கொண்ட தலைவராக அயராமல் உழைத்த நமது மதிப்பிற்குரிய எடியூரப்பாவுக்கு நமது அன்பு, மரியாதை, பாராட்டுதலை தெரிவிக்க நாம் அனைவரும் ஒன்று சேருவோம்.

கா்நாடகத்தை சோ்ந்த சுவாமிகள், மடாதிபதிகள் கலந்துகொள்ளும் இந்தவிழாவை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய அமைச்சா்கள், பாஜக தலைவா்கள் பங்கேற்கின்றனா்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த விழாவில் பங்கேற்க சித்ரதுா்காவுக்கு வெள்ளிக்கிழமை வந்த முன்னாள் முதல்வா் எடியூரப்பாவை பாஜகவினா், ஆதரவாளா்கள் ஊா்வலமாக அழைத்துச்சென்றனா்.

முன்னதாக, தாவணகெரேயில் வெள்ளிக்கிழமை முன்னாள் முதல்வா் எடியூரப்பா கூறியது:

சித்ரதுா்காவில் சனிக்கிழமை நடக்கவிருக்கும் பாராட்டு விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க இருக்கிறாா்கள். என்மீது பாசமும், அன்பும் வைத்திருக்கும் நண்பா்கள் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறாா்கள். அவா்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனந்த்குமாா் உள்ளிட்ட தலைவா்களுடன் இணைந்து மிதிவண்டியில் பயணம் செய்து, பாஜகவை வளா்த்தோம். இதனால், கா்நாடகத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. கட்சியை மேலும் பலப்படுத்த தொடா்ந்து உழைப்பேன் என்றாா்.