90 லட்சத்தில் தியாகி சுப்பையா இல்லம் புதுப்பிப்பு

புதுச்சேரி, அக்.9:   புதுச்சேரியின் தியாகி வ.சுப்பையாவின் இல்லத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எஃப்.ஷாஜகான் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.   புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பழம்பெரும்

புதுச்சேரி, அக்.9:   புதுச்சேரியின் தியாகி வ.சுப்பையாவின் இல்லத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எஃப்.ஷாஜகான் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

  புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பழம்பெரும் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான வ.சுப்பையா மற்றும் அவரது மனைவி சரஸ்வதி சுப்பையா ஆகியோர் வாழ்ந்த தங்களது இல்லத்தை அரசுக்கு தானமாக வழங்கினர்.

  இதையடுத்து அந்த இல்லத்தில் வ.சுப்பையா நினைவு இல்லமாக்கி அதில் நூலகம், சமூக ஆராய்ச்சி மையமாகச் செயல்படுத்த முடிவு செய்தது.

  அதற்காக ரூ.90,00,000 செலவில் பழமை மாறாதவாறு அந்த இல்லத்தைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

  வரும் பிப்ரவரி மாதம் வ.சுப்பையாவின் நூற்றாண்டு விழா தொடங்க உள்ள நிலையில் இப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் அமைச்சர் எம்.ஓ.எச்.எஃப்.ஷாஜகான் வ.சுப்பையா இல்லத்தை ஆய்வு செய்தார். அங்கு நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அமைச்சருடன் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சிவக்குமார், ஆர்.விசுவநாதன், நாரா.கலைநாதன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் மனோகர், ராமசாமி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com