

ஜெயவிஷால் ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் "மார்கழி 16'. இப்படத்தில் கதாநாயகனாக ஜெயந்த் அறிமுகமாகிறார். இவர் "நீங்கள் கேட்டவை', "கண்ணே கலைமானே' உள்ளிட்ட பல படங்களில் நடித்த பானுசந்தரின் மகன் ஆவார். தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீநிதி இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இவர்களுடன் கூத்துப்பட்டறையைச் சேர்ந்த சந்திரா, ஸ்ரீதேவி, வனிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கிறார்கள்.
இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்டீபன் இப்படத்தை கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் ஸ்டீபனிடம் கேட்டபோது...
""டிசம்பர் 31-ம் நாளை குறிக்கும் தமிழ் நாளான மார்கழி 16-ல் நடைபெறுகிற முக்கிய நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. இக்கதை நிஜமும், கற்பனையும் கலந்த ஒரு யதார்த்தமான கதை. என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்துக்கு கொஞ்சம் உயிர் கொடுத்திருக்கிறேன்'' என்றார் ஸ்டீபன்.
ஒளிப்பதிவு -லஷ்மிபதி. இசை -பாபி. படத்தொகுப்பு -சாய்சுரேஷ். சண்டைப் பயிற்சி -செல்வம். வசனம் -பச்சை பெருமாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.