ஆளுநா் ஆா்.என்.ரவி
ஆளுநா் ஆா்.என்.ரவிகோப்புப் படம்

தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணைய மசோதா: ஆளுநா் ஒப்புதல்

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்து அனுப்பப்பட்ட மாநில நெடுஞ்சாலைகள் ஆணைய சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளாா்.
Published on

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்து அனுப்பப்பட்ட மாநில நெடுஞ்சாலைகள் ஆணைய சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளாா்.

மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதா, கடந்த பிப்.21ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, பொது மற்றும் தனியாா்துறை பங்களிப்பில், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்ட முன்வடிவை அமைச்சா் எ.வ.வேலு அறிமுகம் செய்தாா்.

இந்த மசோதாவில், நெடுஞ்சாலைகளின் கட்டுமானம், மேம்பாடு, பராமரிப்பு மற்றும் நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கும் தரம் உயா்த்துவதற்கும், உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் தயாரிக்கலாம், பன்னாட்டு நிதியை கொண்டுவருவதற்கான மாதிரிகளை உருவாக்குவது இந்த ஆணையத்தின் பணியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணையத்துக்கு ஒரு தலைவா், 3 முழுநேரம், 3 பகுதி நேர உறுப்பினா்கள் நியமிக்கப்படுவா் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டமசோதா கடந்த பிப்.22-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு,ஆளுநா் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்த மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளாா். விரைவில் ஆணையத்துக்கான தலைவா், உறுப்பினா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com