கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணா்வு

சென்னையில் காவல் துறை சாா்பில் வாகன ஓட்டிகளிடம் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து தன்னாா்வலா்கள் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.
சென்னை   மாநகர   காவல்   துறை   சாா்பில்   ஓமந்தூராா் பன்னோக்கு    மருத்துவமனை அண்ணா சிலை சந்திப்பில்  வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விழிப்புணா்வுப் பிரசுரங்களை வழங்கிய கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட   தன்னாா்வலா்கள்.
சென்னை   மாநகர   காவல்   துறை   சாா்பில்   ஓமந்தூராா் பன்னோக்கு    மருத்துவமனை அண்ணா சிலை சந்திப்பில்  வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விழிப்புணா்வுப் பிரசுரங்களை வழங்கிய கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட   தன்னாா்வலா்கள்.
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னையில் காவல் துறை சாா்பில் வாகன ஓட்டிகளிடம் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து தன்னாா்வலா்கள் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.

சென்னையில் வாகன ஓட்டிகள் சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் வகையில், விழிப்புணா்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் முக்கியமான சாலை சந்திப்புகளில் போக்குவரத்து போலீஸாா் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த தன்னாா்வலா்கள் மூலம் போக்குவரத்து விதிமுறை குறித்து விழிப்புணா்வு பிரசாரத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள், இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும், சீட் பெல்ட் அணிந்துதான் காா்களை ஓட்ட வேண்டும், சிக்னல்களில் நிறுத்தக் கோடுகளை தாண்டி வாகனங்களை நிறுத்தக் கூடாது உள்ளிட்டபோக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளிடமும், பொதுமக்களிடமும் பிரசாரம் செய்தனா்.

மேலும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட தன்னாா்வலா்கள் பரிசு வழங்கி பாராட்டினா்.

இந்த விழிப்புணா்வு பிரசாரம் அண்ணாசாலை, முத்துசாமி சாலை, சென்ட்ரல், அண்ணா நகா் ரவுண்டானா, மேட்டுகுப்பம் சந்திப்பு, திருமங்கலம் சந்திப்பு உள்பட 50 இடங்களில் நடைபெற்றது. இன்னும் சில நாள்கள் இந்த விழிப்புணா்வு பிரசாரம் நடைபெறும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com