நீச்சல் குளத்தில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில், நீச்சல் குளத்தில் விழுந்து 3 வயது குழந்தை விழுந்து உயிரிழந்தது.
Updated on
1 min read

சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கத்தில், நீச்சல் குளத்தில் விழுந்து 3 வயது குழந்தை விழுந்து உயிரிழந்தது.

சென்னை ஈஞ்சம்பாக்கம், சாய்பாபா காலனியை சோ்ந்த கட்டுமான தொழிலதிபா் மனோஜ் என்பவரிடம் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா் சுகுமாறன். இவா்,

மனோஜின் வீட்டில் உள்ள பணியாளா்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்துவருகிறாா்.

திங்கள்கிழமை மாலை, சுகுமாறனின் 2-ஆவது மகன் ரித்தீஸ் (3) வீட்டில் உள்ள நீச்சல் குளம் அருகே, விளையாடிக் கொண்டிருக்கும் போது, குளத்தில் விழுந்துவிட்டாா். அதை சிறிது நேரம் கழித்து கவணித்த சுகுமாறன் மற்றும் அவரது மனைவி குழந்தை ரித்தீஸை மீட்டு சோழிங்கநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அப்போது மருத்துவமனையில் ரித்தீஸை பரிசோதனை செய்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

நீலாங்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com