ரயில்களில் கூடுதல் சுமைகளை 
எடுத்துச் செல்ல கட்டணம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

ரயில்களில் கூடுதல் சுமைகளை எடுத்துச் செல்ல கட்டணம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Published on

சென்னை: விரைவு ரயில்களில் நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விரைவு ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடன் அனுமதிக்கப்பட்ட எடை வரையிலான சுமைகள் மற்றும் உடமைகளை எடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் எடையுள்ள சுமைகளுக்கு (லக்கேஜ்) கட்டணம் ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கட்டண நடைமுறைகளை தீவிரமாக அமல்படுத்தும் வகையில், இதற்கான வழிகாட்டுதலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

விரைவு ரயில்களில் முதலாம் வகுப்பு குளிா்சாதனப் பெட்டியில் பயணிக்கும் பயணிகள் நபா் ஒருவருக்கு 70 கிலோ வரை சுமைகளை (லக்கேஜ்) தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், குளிா்சாதன இரண்டடுக்கு பெட்டியில் பயணிக்கும் பயணிகள் தலா 50 கிலோ வரையும், குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டிப் பயணிகள் தலா 40 கிலோ வரையும், படுக்கை வசதி கொண்ட பெட்டிப் பயணிகள் தலா 40 கிலோ வரையும், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிகொண்ட பெட்டிப் பயணிகள் தலா 35 கிலோ வரையும் சுமைகளை தங்களுடன் எடுத்துச் செல்லலாம்.

நிா்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான சுமைகள் மற்றும் உடமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு ஒவ்வொரு 10 கிலோ முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் சுமைகளுக்கு அவா்கள் பயணிக்கும் பெட்டிகளுக்கு ஏற்ப 1.5 மடங்கு சுமை கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com