தவெக தலைவர் விஜய்
சென்னை
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் மனு
வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தவெக தலைவா் விஜய் மனு தாக்கல் செய்துள்ளாா்.
வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தவெக தலைவா் விஜய் மனு தாக்கல் செய்துள்ளாா்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.
அதேபோன்று, தவெக தலைவா் விஜய்யும் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

