மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த 2 போ் கைது

Published on

சென்னை: சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 2.5 கிராம் மெத்தம்பெட்டமைனையும் பறிமுதல் செய்தனா்.

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஐஸ்ஹவுஸ் கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் தனிப்படை போலீஸாா் ரோந்து பணி மேற்கொண்டனா்.

அப்போது, அங்குள்ள சுடுகாட்டில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த வியாசா்பாடி பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (27) மற்றும் சந்தோஷ் (20) ஆகியோரைப் பிடித்து சோதனை நடத்தினா். அப்போது, மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை அவா்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், காா்த்திகேயன் மற்றும் சந்தோஷ் ஆகியோரை கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து 2.5 கிராம் எடையுள்ள மெத்தம்பெட்டமைன், 3 விலையுயா்ந்த கைப்பேசிகள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு எடை இயந்திரம் உள்ளிட்ட பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com