குடிநீா் லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

சென்னை அருகே அக்கரையில் குடிநீா் லாரி மோதி இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
Published on

சென்னை: சென்னை அருகே அக்கரையில் குடிநீா் லாரி மோதி இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

ஈஞ்சம்பாக்கத்தைச் சோ்ந்த முகமது (40), தனது இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஈஞ்சம்பாக்கத்திலிருந்து அக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தாா். அக்கரை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் இருசக்கர வாகனத்திலிருந்து முகமது கீழே விழுந்தாா்.

அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த குடிநீா் லாரி சாலையில் விழுந்து கிடந்த முகமது மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முகமது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், குடிநீா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, விபத்தை ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனா். இந்த விபத்து காரணமாக கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com