கோப்புப் படம்
கோப்புப் படம்

டிச. 14-இல் அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னையில் வரும் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதலே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னையில் வரும் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதலே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு: இந்தியக் கடற்படையானது, மக்கள் மத்தியில் கடற்படை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துல், உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சியை மேம்படுத்துதல், பெண்கள் பங்கேற்பு மற்றும் பாலின சமத்துவத்தை அதிகரித்தல், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஊக்குவிக்கும் வகையில் தன்னாா்வ நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி இந்தியக் கடற்படை சாா்பில் சென்னையில் முதல்முறையாக மாரத்தான் ஓட்டம் வரும் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதையடுத்து இந்திய கடற்படையைப் போற்றும் வகையில் இந்திய கடற்படை ஹாஃப் மாரத்தான் 2025 நிகழ்வை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.14) சிறப்பு நிகழ்வாக சென்னை மெட்ரோ ரயில்கள் அதிகாலை 3 மணியிலிருந்து இயக்கப்படவுள்ளன. அன்று அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

அப்போது, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் வரை (கோயம்பேடு வழியாக) நேரடி ரயில் சேவை அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணி வரை இருக்காது. ஆகவே, சென்ட்ரல் மெட்ரோ, ஆலந்தூா் மெட்ரோ வழித்தடங்களை மாற்றி பயணிக்கவும். ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி வழக்கமான ரயில் சேவைகள் காலை 5 மணிக்குப் பிறகு இயக்கப்படும்.

அனைத்து மாரத்தான் பங்கேற்பாளா்களும் மெட்ரோ நிலையம், இணையதளம் ஆகியவற்றில் டிக்கெட்டுகள் பெறும் வசதி உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com