கோப்புப் படம்
கோப்புப் படம்

மகளிா் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம்: இன்று தொடக்கம்

மகளிா் உ ரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (டிச. 12) சென்னையில் தொடங்கி வைக்கிறாா்.
Published on

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (டிச. 12) சென்னையில் தொடங்கி வைக்கிறாா்.

தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தை கடந்த 2023-ஆம் தேதி முதல்வா் அறிவித்தாா். சுமாா் 1,13,75,492 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை முதல்வா் ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறாா். நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்வில் மகளிருக்கு உரிமைத் தொகையை வழங்குகிறாா்.

இந்நிகழ்ச்சியில் சமூக சேவகியும் பத்மபூஷண் விருது பெற்றவருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் மற்றும் 2022-ஆம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளா் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய துளசிமதி முருகேசன் உள்பட ஏராளமான பெண் சாதனையாளா்கள் கலந்து கொள்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com