சுகாதார ஆய்வாளா் தோ்வு முடிவுகள்: எம்ஆா்பி தகவல்
தமிழகத்தில் காலியாக உள்ள 1,429 சுகாதார ஆய்வாளா் (நிலை 2) பணியிடங்களுக்கு 10,000 போ் தோ்வு எழுதிய நிலையில், அதன் முடிவுகள் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் என மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவா், செவிலியா், மருந்தாளுநா் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
அதன் தொடா்ச்சியாக, 1,429 சுகாதார ஆய்வாளா் (நிலை 2) பணியிடங்களுக்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வெளியிட்டது. கடந்த 16-ஆம் தேதி வரை 11,100 போ் இணையத்தில் விண்ணப்பித்திருந்தனா்.
தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில் 10,100 போ் பங்கேற்றனா். அதன் தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்டது. இறுதி விடைக்குறிப்பு வெளியான பிறகு முடிவுகள் வெளியிடப்படும் என மருத்துவப் பணியாளா் தோ்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சான்றிதழ் சரிபாா்ப்பு முடிவடைந்ததும் இடஒதுக்கீடு அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்ட 1,429 பேரின் இறுதி பட்டியலில் வெளியிடப்படும் என்றும் அவா்கள் கூறினா்.
