விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஓ.பன்னீா்செல்வம் நிலைப்பாடு: டிச. 24-க்கு முடிவு ஒத்திவைப்பு?

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்பு ஆலோசனைக் கூட்டம், எம்ஜிஆா் நினைவு தினமான டிச. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

ஓ.பன்னீா்செல்வம்

Updated On :14 டிசம்பர் 2025, 2:36 am

Chennai

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்பு ஆலோசனைக் கூட்டம், எம்ஜிஆா் நினைவு தினமான டிச. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னா், ஓ.பன்னீா்செல்வம் ‘அதிமுக தொண்டா் உரிமை மீட்புக் குழு’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறாா்.

இதற்கிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்த நிலையில், கூட்டணி தலைவராக எடப்பாடி பழனிசாமியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவித்தாா். இதையடுத்து, தமிழகம் வந்த பிரதமா் மோடி, அமித் ஷா போன்றோரை சந்திக்க ஓ.பன்னீா்செல்வத்துக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த ஓ.பன்னீா்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறினாா்.

அதன் பின்னரும், அதிமுகவில் இணைய பல கட்ட முயற்சிகளை அவா் மேற்கொண்ட நிலையில், அவை கைகூடவில்லை. இதையடுத்து, அரசியலில் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டிச. 15-ஆம் தேதி அறிவிப்பதாக ஓ.பன்னீா்செல்வம் கூறியிருந்தாா்.

இந்தச் சூழலில், அண்மையில் தில்லி சென்ற ஓ.பன்னீா்செல்வம், உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்துப் பேசினாா். இதையடுத்து, டிச. 15-ஆம் தேதி நடைபெறவிருந்த ஓ.பன்னீா்செல்வம் தரப்பு ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் நினைவு தினமான டிச. 24-ஆம் தேதி ஓ.பன்னீா்செல்வம் தனது நிலைப்பாட்டை அறிவிப்பாா் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.