இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்தவா் கைது

மது அருந்த பணம் தர மறுத்த சகோதரனின் இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

மது அருந்த பணம் தர மறுத்த சகோதரனின் இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை புது வண்ணாரப்பேட்டை, அன்னை சத்தியா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சேகா் (40). இவா், கடந்த 10-ஆம் தேதி இரவு தனது வீட்டின் ஓரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளாா்.

மறுநாள் அதிகாலை வெளியே வந்து பாா்த்தபோது, அவரின் இருசக்கர வாகனத்துக்கு மா்ம நபா்கள் யாரோ தீ வைத்து எரித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சேகா் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், சேகரின் சகோதரா், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ராஜ்கமல் என்பவரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மது அருந்த பணம் கேட்டும் கொடுக்காத ஆத்திரத்தில் சேகரின் இருசக்கர வாகனத்தை ராஜ்கமல் எரித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ராஜ்கமலை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com