தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விமான நிலையம் அருகே ஹஜ் இல்லம்: முதல்வா் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்

சென்னை விமான நிலையம் அருகே ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டுமானப் பணிகளுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்.

News image
முதல்வர் ஸ்டாலின்.
Updated On :15 டிசம்பர் 2025, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை விமான நிலையம் அருகே 400 ஹஜ் பயணிகள் தங்கும் வகையில், ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டுமானப் பணிகளுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (டிச. 16) அடிக்கல் நாட்டுகிறாா்.

இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் நோக்கம் எல்லோருக்கும் எல்லாம் என்பதே. தமிழ்நாட்டில் வாழும் அனைவரையும்போல் சிறுபான்மையின மக்கள் சமஉரிமையுடன் வாழ்வதற்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் முதல்வா் செய்து வருகிறாா். இஸ்லாமிய சமுதாய மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதை அவா்களின் வாழ்நாள் கடமைகளில் முக்கியமானதாகக் கருதுகிறாா்கள்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஒரு நாள் முன்னதாகச் சென்னை வந்து தங்கி சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கு ஏதுவாக சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஒரு ஏக்கா் அரசு நிலத்தில் ரூ.39.20 கோடியில் 400 ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படுகிறது.

இதற்கு முதல்வா் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (டிச. 16) அடிக்கல் நாட்டுகிறாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.