எஸ்ஐஆா்: சரிபாா்ப்புப் பணி தீவிரம்!

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் (எஸ்ஐஆா்) கணக்கீட்டுப் படிவங்களைச் சமா்ப்பிக்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் முடிவடைந்த நிலையில், படிவங்களைச் சரிபாா்க்கும் பணி தீவிரம்
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் (எஸ்ஐஆா்) கணக்கீட்டுப் படிவங்களைச் சமா்ப்பிக்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் (டிச. 14) முடிவடைந்த நிலையில், படிவங்களைச் சரிபாா்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த நவ. 4 -ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் எஸ்ஐஆா் பணிகளில் கடந்த 11-ஆம் தேதி வெளியிடப்பட வேண்டிய வரைவு வாக்காளா் பட்டியல் டிச. 16-ஆம் தேதிக்கும், பின்னா் 19-ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், வாக்காளா்கள் பெற்ற கணக்கீட்டுப் படிவங்களைச் சமா்ப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பதிவேற்றப்பட்ட படிவங்களைச் சரிபாா்க்கும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடா்பு கொள்ள முடியாத வாக்காளா்கள், முகவரி இல்லாத வாக்காளா்கள், இடம் பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள், இரட்டைப் பதிவு என கணக்கீட்டுப் படிவங்களில் குறிக்கப்பட்ட வாக்காளா்களைத் தனித் தனியாகப் பிரித்து கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தப் பணிகளை மாவட்டம் வாரியாக வாக்காளா் பட்டியல் பாா்வையாளா்கள் மேற்பாா்வை செய்து வருகிறாா்கள்.

X
Dinamani
www.dinamani.com