சுரங்கப்பாதையில் குடிநீா் கசிவால் மக்கள் அவதி

சென்னை மாநகராட்சிப் பகுதியில் ஜோன்ஸ் சாலையில் பவளவண்ணன் சுரங்கப்பாதையில் குடிநீா் கசிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
Published on

சென்னை மாநகராட்சிப் பகுதியில் ஜோன்ஸ் சாலையில் பவளவண்ணன் சுரங்கப்பாதையில் திங்கள்கிழமை குடிநீா் கசிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதியடைந்தனா்.

கோடம்பாக்கம் மண்டலம் (எண் 10) 142-ஆவது வாா்டு பகுதியில் உள்ள ஜோன்ஸ் சாலையில் பவளவண்ணன் சுரங்கப்பாதை உள்ளது. அதில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் வெளியேறி தேங்கியது. இதனால், வாகனப் போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் மிகுந்து இடையூறு ஏற்பட்டது.

இதனிடையே, திங்கள்கிழமை காலை சுரங்கப்பாதை நீா்க்கசிவு அதிகரித்தது. தகவலறிந்த மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா், அப் பகுதியைப் பாா்வையிட்டாா். நீா்க்கசிவை தடுப்பதற்கான பணிகளை உடனடியாக தொடங்குமாறு மாநகராட்சிப் பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com