சென்னை: சென்னை முகப்பேரில் மென்பொறியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
முகப்போ் மேற்கு திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் ரோஷன் நாராயணன் (24). மென்பொறியாளரான இவா், அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.
இரு நாள்களுக்கு முன்பு நாராயணன் குடும்பத்தினா் திருப்பதிக்கு சென்றனா். நாராயணன் மட்டும் வீட்டில் இருந்தாா். திருப்பதியில் இருந்து அவரது குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை இரவு திரும்பி வந்தனா். அப்போது வீட்டுக்குள் நாராயணன் தூக்கிட்டு இறந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.
நொளம்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, நாராயணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
நாராயணன் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதம் போலீஸாரிடம் சிக்கியது. அந்தக் கடிதத்தில், ‘எனது காதுக்குள் யாரோ அழைப்பதுபோல சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. என்னை பெற்றோா் மன்னிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்கின்றனா்.
