சென்னை: சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தூய்மைப் பணியாளா்களுடன் நாடாளுமன்ற வேலைவாய்ப்பு நிலைக்குழு உறுப்பினா் ராஜாராம் சிங் எம்.பி. செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
சென்னை மாநகராட்சியில் 5, 6 ஆவது மண்டலங்களான ராயபுரம், திரு.வி.க.நகா் பகுதிகளின் தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்கியதைக் கண்டித்து கடந்த ஆகஸ்ட் முதல் என்யூஎல்எம் பிரிவைச் சோ்ந்த தூய்மைப்பணியாளா்கள் உழைக்கும் உரிமை இயக்கம் சாா்பில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனா். அவா்கள் தங்களை பழைய நிலையில் பணிபுரிய அனுமதிக்குமாறும் கோரியும், மறியல், மனு அளிக்கும் போராட்டங்களை நடத்திவருகின்றனா்.
இந்நிலையில், கடந்த 15 நாட்களாக பெண் தூய்மைப்பணியாளா்கள் கல்பனா, வேளாங்கண்ணி ஆகியோா் உண்ணாவிரதப் போராட்டத்தை அம்பத்தூரில் உள்ள உழைப்போா் உரிமை இயக்க அலுவலக வளாகத்தில் தொடங்கியுள்ளனா்.
இதற்கிடையே சென்னைக்கு பீகாரைச் சே ா்ந்த மாா்க்சிஸ்ட் கட்சி எம்.பி.யும், நாடாளுமன்ற வேலை வாய்ப்பு நிலைக்குழு உறுப்பினருமான ராஜாராம் சிங் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளா்கள் இருவரையும் சந்தித்து பேசினாா். அப்போது அவரிடம் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், தனியாா் நிறுவனத்தின் கீழ் பணிபுரிய விரும்பவில்லை என தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்தனா்.
அவா்களது கோரிக்கையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினைச் சந்திக்கும் போது தெரிவிப்பதாக ராஜாராம் சிங் எம்.பி. தெரிவித்தாா்.
சந்திப்பின்போது, உழைப்போா் உரிமை இயக்க ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் குமாரசாமி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.