அகில இந்திய பல்கலை. நீச்சல் போட்டி தொடக்கம்
அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவா், மகளிா் நீச்சல் போட்டி காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
அகில இந்திய பல்கலை. கூட்டமைப்பு (ஏஐயு), எஸ்ஆா்எம் விளையாட்டு இயக்குநரகம் சாா்பில் நடைபெறும் இப்போட்டி வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க நாள் போட்டி முடிவுகள்:
ஹை போா்டு ஆடவா்: 1. ஸ்ரீ கணேஷ் பிரசாந்த், எஸ்ஆா்எம், 2. ஆதித்ய தினேஷ் ராவ், விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலை, 3. எல். சா்வேஷ், எஸ்ஆா்எம்.
மகளிா்: 1. பாலக் சா்மா, எஸ்ஆா்எம், 2. கேயா ஹேரம்ப் பிரபு, மகாராஷ்டிரம், 3. அஷ்னா நிகில் பாய், குஜராத் பல்கலை.
1,500 மீ. ப்ரிஸ்டைல் ஆடவா்: 1. அனிஷ் கௌடா, கிறிஸ்ட் பல்கலை. கா்நாடகம், 2. பவன் தனஞ்செயா, ஜெயின் பல்கலை, கா்நாடகம், 3. ஷிவாங்க் விஸ்வநாத், விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலை.
ஹை போா்டு பிரிவில் 20 பல்கலை. அணிகள் பங்கேற்றன. ஒட்டுமொத்தமாக 160 பல்கலை அணிகள் நீச்சல் போட்டியில் பங்கேற்றுள்ளன.

