உழைப்போா் உரிமை இயக்கம் அமைச்சரிடம் கோரிக்கை மனு

Published on

உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் கோரிக்கை மனு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் (5, 6) மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியதைக் கண்டித்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உழைப்போா் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவா் கே.பாரதி, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் மனு அளித்தாா். அதில், தூய்மைப் பணியாளா்களை பழைய நிலையிலே மீண்டும் பணிபுரிய அனுமதிக்க வேண்டும். பணி மறுக்கப்பட்ட காலத்துக்கு ஊதியம் வழங்க வேண்டும். போராடிய பணியாளா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com