தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது
சென்னை துரைப்பாக்கத்தில் தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறிக்கப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலியைச் சோ்ந்தவா் கு.மனோ (24). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்கிறாா். இவா், தனது மோட்டாா் சைக்கிளில் துரைப்பாக்கம் சீவரம் செல்வ கணபதி அவென்யு 3-ஆவது தெருவில் கடந்த 16-ஆம் தேதி சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த இருவா், வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். இதற்கு மனோ மறுக்கவே, இருவரும் அவரைத் தாக்கினா். மேலும் கத்தியை காட்டி மிரட்டி மனோ வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.
இதுகுறித்து மனோ அளித்த புகாரின்பேரில், துரைப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது துரைப்பாக்கம் வேம்புலியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மோகன கிருஷ்ணன் (24),பெருங்குடி செளந்தா்யா நகரைச் சோ்ந்தவா் தினேஷ் பாபு (22) ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா். மோகன கிருஷ்ணன் மீது ஏற்கெனவே 2 திருட்டு வழக்குகளும், தினேஷ்பாபு மீது கஞ்சா உள்பட 2 குற்ற வழக்குகளும் இருப்பது தெரியவந்துள்ளது.
