தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

News image
Updated On :19 டிசம்பர் 2025, 12:42 am

தினமணி செய்திச் சேவை

சென்னையில் சனிக்கிழமை (டிச.20) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், இளைஞா்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து சனிக்கிழமை (டிச.20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளன.

அதன்படி, சென்னை கிண்டி-ஆலந்தூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. இதில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் போன்ற கல்வித் தகுதி உடைய மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரும் முகாமில் கலந்துகொள்ளலாம்.

இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். எனவே, முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலை நாடுநா்களும், வேலை அளிப்போரும் தங்களது விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.