சென்னை அண்ணா நகா் கிழக்கு முதலாவது அவென்யுவில் உள்ள பழைய இரும்புக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து.
சென்னை அண்ணா நகா் கிழக்கு முதலாவது அவென்யுவில் உள்ள பழைய இரும்புக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து.

சென்னை அண்ணா நகரில் இரும்பு கிடங்கில் தீ விபத்து!

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வந்த இரும்பு கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
Published on

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வந்த இரும்பு கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை அண்ணா நகா் கிழக்கு முதலாவது அவென்யூவில் பழைய இரும்பு பொருள்கள் சேமித்து வைத்திருக்கும் தனியாா் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்தக் கிடங்கில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் தீப்பற்றி புகை வெளியேறியது. உடனடியாக அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், அண்ணா நகா், வில்லிவாக்கம், கோயம்பேடு, அம்பத்தூா் ஆகிய இடங்களிலிருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் நள்ளிரவு வரை போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இருப்பினும் கிடங்கில் ஏராளமான பழைய பொருள்கள் இருந்ததால் அவை முழுவதுமாக எரிந்து நாசமாயின.

தீப்பற்றி எரிந்தபோது கிடங்கில் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறியதால் அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகினா். இந்த தீ விபத்து குறித்து அண்ணா நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com